திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திடீர் ஆய்வு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்குவதில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் இடம் குடியிருப்பு வாசிகள் முறையிட்டனர் இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திடீரென்று நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது துறை சேர்ந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார் அப்போது குடிநீர் வடிகால் வாரிய அலுவலரை அழைத்து பொதுமக்களுக்கு முறையான குடி நீர் வழங்காததை கண்டித்து பேசினார் அதுமட்டுமின்றி 14 லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நீர் தேக்க தொட்டிலிருந்து36 வார்டுகளுக்கு செல்லும் இரண்டு மேல் நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி ஆய்வு மேற்கொண்டார் பின்னர் துறை சேர்ந்த அதிகாரிகளிடம் முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார் பின்னர் கணக்கேடுகளை ஆய்வு மேற்கொண்டார் உடன் நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்
Next Story