ராமநாதபுரம் சுதந்திரப் போராட்ட வீரருக்கு அரசு விழா நடைபெற்றது

பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நூறாவது பிறந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு விழா மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு விழாவாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் தியாகி இமானுவேல் சேகரன் இது உருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதனை தொடர்ந்து 622 பயனாளிகளுக்கு 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நாடாளு மன்ற உறுப்பினர் நவாங்கனி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், செ முருகேசன்,தமிழரசி, சண்முகையா, தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி A.K.S.விஜயன், முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி நாகை. அ.அசோகன், ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன். சார் ஆட்சியர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுச்சாமி , மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தியாகி இமானுவேல் சேகரனார் குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story