ராமகிருஷ்ணா சேவை மையத்தாரின் புத்தக விற்பனை பிரிவு, அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா

ராமகிருஷ்ணா சேவை மையத்தாரின் புத்தக விற்பனை பிரிவு, அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா
குமாரபாளையத்தில் ராமகிருஷ்ணா சேவை மையத்தாரின் புத்தக விற்பனை பிரிவு, அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ராமகிருஷ்ணா சேவை மையத்தாரின் நிர்வாக அலுவலக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, பரமஹம்சர் நூலகம், விசாரா நூல்கள் விற்பனையகம் துவக்க விழா, கல்வி தானம் பயிற்சி மையம், அரசு தேர்வு பயிற்சி அறிமுக வகுப்பு துவக்க விழா நிறுவனர் சுரேஷ் பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது. செயலர் வெங்கட கணேஷ், கரூர் பாலாஜி நிதி நிறுவன அதிபர் சக்தி முருகன், குத்துவிளக்கேற்றி வைத்து நூலகத்தை திறந்து வைத்தனர். புத்தக விற்பனை பிரிவு, அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்பினை தலைமைநிர்வாக அலுவலர் குமாரசுவாமி துவக்கி வைத்தார். இதில் தளபதி லயன்ஸ் சங்க பட்டய தலைவர், அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஷ், நிர்வாகிகள் கார்த்திகேயன், புவனேஸ்வரன், கேசவமூர்த்தி, விசாரா பள்ளி தாளாளர் ரமேஷ், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story