தலைமை தபால் நிலையம் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

தலைமை தபால் நிலையம் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
தலைமை தபால் நிலையம் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளை சார்பாக, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி கடந்த 28 நாட்களாக கடுமையாக போராடிவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆதரவு ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் சத்யமூர்த்தி, செல்லமுத்து, உண்ணாமலை, மாவட்ட துணைச் செயலாளர் அருள் குழந்தை தேவதாஸ், சுப்பிரமணி, யசோதா, மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் அமுதன், மாநில செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story