தனியார் பள்ளியில் நவராத்திரி கொலு பூஜை

தனியார் பள்ளியில் நவராத்திரி கொலு பூஜை
குழந்தைகளை தெய்வங்களாய் பாவித்து தனியார் பள்ளியில் நவராத்திரி கொலு பூஜை நடைபெற்றது
திண்டுக்கல் ஆர் எம் காலனியில் உள்ள தனியார் (க சுட்டீஸ் குட்டீஸ்) பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்றது. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கேலரியில் ஒருபுறம் சுவாமி சிலைகள் வரிசையாக அடுக்கப்பட்டு மாணவர்களின் செயல் திட்டங்களான தமிழ் கலாச்சார குடும்ப வாழ்வு முறை குறித்த விளக்கங்கள், கோயில், கோபுரங்கள், வேளாண் தோட்டங்கள், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் கொலுக்களாக வைக்கப்பட்டிருந்தன. மேலும் குழந்தைகளை தெய்வங்களாக பாதித்து விநாயகர் சிவன் முருகன் மும்மூர்த்திகள் முப்பெரும் தேவியர் நாரதர் இந்திரன் முனிவர்கள் என வேடங்கள் அணிந்து கொலு அமைப்பு படி வரிசையாக அமைக்கப்பட்டு இருந்த கேலரியில் மாணவர்களை அமர்த்தி பூஜை செய்யப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் என பலரும் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சிந்து சுரேஷ் செய்திருந்தார்.
Next Story