சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கலைஞர் எனும் தாய் புத்தகம் தலைவர் சுதா முருகன் வழங்கினார்.
Arani King 24x7 |9 Oct 2024 1:48 PM GMT
ஆரணி, அக். 10 சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு கலைஞர் எனும் தாய் புத்தகத்தை தலைவர் சுதா முருகன் வழங்கினார்.
ஆரணி, அக். 10 சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு கலைஞர் எனும் தாய் புத்தகத்தை தலைவர் சுதா முருகன் வழங்கினார். சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுதா முருகன் தலைமை வகித்தார். துணை தலைவர் திலகவதி செல்வராஜன் முன்னிலை செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். பேரூராட்சி மன்ற கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் திமுக நகர செயலாளரும், மூத்த உறுப்பினருமான இரா. முருகன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற புத்தகங்களை துணை தலைவர் திலகவதி செல்வராஜன், செயல்அலுவலர் சரவணன் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கினர். பின்னர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தற்போது நடைபெற்று வரும் திட்ட புண்ணைகளை நேரில் சென்று பார்வையிட்டு துரித படுத்த வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் இடர்பாடுகள் ஏதாவது ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் அளவிற்கு தயார் நிலையில் இருப்பது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story