திருப்பத்தூர் பெரிய ஏரியில் செத்து கிடைக்கும் மாடு

திருப்பத்தூர் பெரிய ஏரியில் செத்து கிடைக்கும் மாடு
திருப்பத்தூர் பெரிய ஏரியில் மாடு செத்து துர்நாற்றம் வீயசிவருவதால் பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மினி கூவமாக மாறி வரும் திருப்பத்தூர் பெரிய ஏரி! மீட்கப்படுமா நகரின் அடையாளம்! பெரிய ஏரியில் செத்து கிடக்கும் மாடு! நாய்கள் கடித்து இழுக்கும் அவலம்! நடவடிக்கை எடுக்காத நகராட்சி! திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அடையாளங்களில் திருப்பத்தூர் நகரில் உள்ள பெரிய ஏரியும் ஒன்றாகும். 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி தற்போது குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. கோடை காலத்திலும் வற்றாமல் இருக்கும் பெரிய ஏரியில் டன் கணக்கில் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால் அவ் வழியாக செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை கழிவுகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதால் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இறந்த மாட்டை இந்த பெரிய ஏரியில் வீசி சென்று உள்ளனர் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இறந்த மாட்டை நாய்கள் கடித்து இழுத்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர்க்கு தெரிவித்தும் பெரிய ஏரியில் இறந்து கிடக்கும் மாட்டை அப்புறப்படுத்தாமல் மெத்தன போக்காக செயல்படுகின்றனர் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
Next Story