விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்செங்கோடு ரெட் ராக் ரோட்டரி சங்கம் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை பரணி டிரஸ்ட் விசாகன் மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை ஒட்டி சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக்கூடாது மீறி உடைத்தால் ஏற்படும் விபத்துக்கள் என்னென்ன என்பது குறித்து பொது மக்களுக்கு விளக்கம் வகையில் பிரச்சார வாகனம் நகர் முழுதும் பிரச்சாரம் செய்ய துவக்கி வைக்கப்பட்டது. திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், நகர காவல் நிலைய ஆய்வாளர் வெங்கட்ராமன், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிறுவனர்குமார், ரெட் ராக் ரோட்டரி சங்க தலைவர் கவின்ராஜ், ரோட்டரி சங்க செயலாளர் சசிகுமார்,பரணி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் பரணிதரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசியநகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கூறியதாவது சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை ஒட்டி பக்தியுடன் சாமி கும்பிடும் நாம் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நமது திருஷ்டியை கழிக்க உடைக்கும் பூசணிக் காய்களை சாலையின் ஓரமாக உடைத்தால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வழுக்கி விழுந்து கை, கால்கள் உடையும்அபாயமும் சில நேரங்களில் உயிரிழக்கும் சூழ்நிலையும் உருவாகாமல் தடுக்க முடியும். இதனை தடுக்கும் வகையில் திருச்செங்கோட்டில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தை நகரம் முழுவதும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் அதையும் தாண்டி சாலைகளில் பூசணிக்காய் உடைக்கப்பட்டு இருந்தால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வாகனத்தில் இரண்டு நாட்களும் சாலையில் உடைக்கப்பட்டு சிதறி கிடக்கும் பூசணிக்காய் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களோடு நகராட்சி பணியாளர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் எனவே பொதுமக்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத வகையில் பூசணிக்காய் உடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என கூறினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முக வடிவு, செல்வி ராஜவேல், தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், மல்லிகா, ராஜவேல், கார்த்திகேயன், முருகேசன், தினேஷ்குமார், அசோக் குமார், மனோன்மணி சரவணன் முருகன், செல்லம்மாள் தேவராஜன்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பூசணிக்காய் ஏற்படும் விபத்தை விளக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் தவறி விழுவது போல் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பார்வையாளர்கள் வெகுவாக பார்த்தனர்.
Next Story