குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்
Komarapalayam King 24x7 |10 Oct 2024 11:37 AM GMT
குமாரபாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டத்தின் கீழ் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணம் இல்லா நகராட்சியை உருவாக்குவதற்கு அரசு சார்ந்த அலுவலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கூராய்வு விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. வளரிளம் பெண்கள் பாதுகாப்பு, அவர்களை கண்காணித்தல், குழந்தை திருமணம் தடுப்பதற்கான வழிமுறைகள், இலவச தொலைபேசி எண். 1098, வாட்ஸ் அப் மொபைல் போன் எண்-. 9486111098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க சொல்லுதல், தகவல் அளிப்பவர் ரகசியம் பாதுகாக்கப்படும், 18 வயது அடையாமல் திருமணம் செய்யக்கூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் சமூக பாதுகாப்பு அலுவலர்கள் மணிகண்டன், நளினி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் செந்தாமரை, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், பரிமளம், விஜயா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story