உடுமலை அருகே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள அக் ஷரா வித்யா மந்த்ர மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியை பள்ளியின் அறங்காவலர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். உடன் பள்ளி தலைவர் முருகேசன் , உதவி தலைவர் சாதிக்பாட்ஷா , செயலாளர் சண்முக பிரியா கலந்து கொண்டனர். கண்காட்சியில் குழந்தைகள் செய்த செய்முறை மற்றும் செய்முறை மாதிரிகள், கலை சார்ந்த கலைப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.மேலும் ஆசிரியர்களும் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தங்களது கலைப் பொருட்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.குறிப்பாக ISRO - ஆல் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளின் மாதிரி வடிவங்கள் ,போர்விமானம் மாணவ மாணவிகள் ,பொதுமக்களின் கண்களை கவரும் வகையில் வியப்பூட்டும் விதமாக இருந்தது.மேலும் போர்விமானம் ராக்கெட்கள் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.மேலும் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ரோபோடிக் மற்றும் இதயம் நுரையீரல் வனவிலங்கு சரணாலயம் நீர்வீழ்ச்சி பூமியை சுற்றும் கோள்கள் மாதிரி வடிவமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வியப்படையச் செய்தது.மற்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்தி வந்த பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்டங்கள் மரச் சாமான்கள், பீங்கான்கள், பித்தளை மற்றும் செம்புப் பொருட்கள், எடைக்கற்கள், நவரத்தின கற்கள், ருத்ராட்ச மாலைகள், வானொலிகள், தட்டச்சு இயந்திரம் மற்றும் தொலைபேசிகளும் வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் பகத் சிலம்பம் மற்றும் களரி பயிற்சிப் பள்ளியின் பழங்காலப் போர்க்கருவிகளும் வைக்கப் பட்டிருந்தது. இவையும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது மேலும் பாலைவனத்தில் வளரும் செடிகள், குளிர் பிரதேசத்தில் வளரும் செடிகள், வெப்ப மண்டலத்தில் வளரும் தாவரங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகள் மற்றும் மலர்ச் செடிகளும் வைக்கப்பட்டிருந்தன. மேலும் பள்ளியில் நடைபெற்ற அறிவு கலை அறிவியல் கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.மேலும் பொதுமக்கள் கூறியதாவது பள்ளியில் நடைபெற்ற கண்காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது குறிப்பாக சென்னை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படும் இஸ்ரோ போர் விமானங்கள் மற்றும் பழங்கால போர்வாள் கருவிகள் பழங்கால பொருட்கள் கண்டு களித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என தெரிவித்தனர்
Next Story