நாமக்கல்லில் ஆயுதபூஜைக்கான அழகு தோரணங்கள் விற்பனை ஜரூர்....!

நுழைவாயில் வண்ண வண்ண தோரணங்கள், ஆயுதபூஜை என்ற எழுத்துகள் உள்ள தோரணங்கள் , நல்வரவு, வெல்கம் என்ற எழுத்துத்தோரணம்,அழகுத்தோரணங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை விழாவில், வீடு, நிறுவனங்கள் மற்றும் அனைத்து தொழில் சார்ந்த இடங்களை அலங்கரிக்க வசதியாக, அசத்தலான ரெடிமேடு தோரணம் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. டிரான்ஸ்போர்ட் சிட்டியான நாமக்கல்லில் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை களைகட்டியது நாமக்கல் நகரமே இன்று பரப்பரப்பாக காணப்பட்டது... வீடு அலுவலகம் மற்றும் லாரித்தொழில் சார்ந்த பாடிபில்டர், மெக்கானிக் ஒர்க் ஷாப், பெயிண்ட் / லேத் பட்டறை, கண்ணாடி கடைகள், பிரிண்டிங் பிரஸ் ஆகிய இடங்களில் சுத்தப்படுத்தும் பணியில் மும்முரமாக ஓனர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்......
வீடு, அலுவலகம் , கடைகள், லாரி பட்டறைகளில் வாழைமரம், மாவிலை தோரணம், ஆடியோ மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்தும் பல்வேறு ஜிகினா காகிதங்கள், சீரியல் லைட் மற்றும் பல வண்ண தோரணங்கள் கட்டி இந்த ஆயுத பூஜையை கொண்டாட இக்கால (2k Kids) இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதால், 'கலர்புல்' ரெடிமேடு தோரணங்கள் கட்டி வீடு, அலுவலகங்கள் , டிரான்ஸ்போர்ட் சார்ந்த தொழிற்சாலைகளை அலங்கரிப்பது அதிகரித்துள்ளன.தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட, தோரணங்கள், நிலவு தோரணம்,மாவிலை தோரணம் போன்றவை ஏராளமான டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளன. நாமக்கல்லில் பேருந்து நிலையம், கடைவீதி, நேதாஜி சிலை அருகில், சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு , பரமத்தி ரோடு, உழவர் சந்தை, பூங்கா சாலை, பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது....
இதுகுறித்து நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள வாசவி ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தாசப்பன் கூறுகையில்......
இந்தாண்டு சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விழாவை விமரிசையாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.... கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அதிகமாக கலர் தோரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு வகையான மெட்டீரியல்களில், கலர்புல் தோரணம், மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன,நுழைவாயில் தோரணங்கள், நுழைவாயிலில் ஆயுதபூஜை என்ற எழுத்துகள் உள்ள தோரணம், வெல்கம் என்ற எழுத்துத்தோரணம்,அழகுத்தோரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன,மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story