காங்கிரஸ் கட்சி அமைதி பாத யாத்திரை.
Arani King 24x7 |10 Oct 2024 1:45 PM GMT
ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரணி காமராஜர் சிலை அருகிலிருந்து அமைதி பாதயாத்திரை சென்றதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடலூர் எம்.பி விஷ்ணுபிரசாத் கலந்துகொண்டார்.
கடலூர் எம்.பி விஷ்ணுபிரசாத் பங்கேற்பு. ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை ஆரணி காமராஜர் சிலை அருகிலிருந்து அமைதி பாதயாத்திரை சென்றதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடலூர் எம்.பி விஷ்ணுபிரசாத் கலந்துகொண்டார். காந்தியடிகளின் 155வது பிறந்த நாள் விழா முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பாத யாத்திரை நடைபெற்றது. பாத யாத்திரையில் மக்களிடையே சாதி மத உணர்வுகளை தூண்டிவிடும் இயக்கங்களை கண்டறிந்து அகற்றிடவும், இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகவும், நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், பெட்ரோல், டீசல் விலை குறைத்திடவும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டனர். இதில் கடலூர் எம்.பி எம்.கே.விஷ்ணுபிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் பாதயாத்திரையை துவக்கி வைத்தார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பிரசாத் தலைமை தாங்கினார். இதில் நகரமன்ற உறுப்பினர் ஜெயவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனி, ஆரணி தொகுதி நிர்வாகி பி.கிருஷ்ணா, வட்டாரத்தலைவர்கள் பந்தாமணி, மருசூர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் எஸ்.வினோத்குமார், எஸ்.சி துறை மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட நிர்வாகி தெள்ளூர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த பாத யாத்திரை ஆரணி காமராஜர் சிலை அருகி லிருந்து காந்திரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணி காந்தி சிலை வரை சென்றனர்.
Next Story