ராமநாதபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு எழுதுகட்டு விழா நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |10 Oct 2024 2:39 PM GMT
கீழக்கரை அருகேயுள்ள மேலவலசை கிராமத்தில் எருதுகட்டு விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி அருகேயுள்ள மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னும் சிறையெடுத்த அய்யனார் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 264 ஆம் ஆண்டு சிறப்பு பெற்ற மாடுபிடி திருவிழா என்னும் எருதுகட்டு விழா இன்று பகல் 2.00 மணியளவில் சீறும் சிறப்புடன் நடைபெற்றது. இந்த எருதுகட்டு விழாவில் 35 காளை மாடுகள் களத்தில் இறக்கப்பட்டு மாடுபிடி வீரர்களை அச்சுறுத்தும் விதமாக இருந்தாலும் தந்திரமாகவும் திறமையாகவும் காளைகளை பிடித்து அடக்கினர்.
Next Story