மாவட்ட ஆட்சியர் இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு.

நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு 3,866 யூனிட்கள் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு, 36 இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 01 தேசிய தன்னார்வ இரத்ததான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் 3 அரசு இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 2023 ஆம் வருடம் அரசு நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4,912 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 101 இரத்ததான முகாம்களின் மூலம் 8,054 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு 3,866 யூனிட்கள் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் 36 இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மருத்துவர் எ.அன்புமலர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story