தற்காலிக பட்டாசுகள் விற்பனை செய்ய உரிமம் பெற்றவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்!

சங்ககிரி: தற்காலிக பட்டாசுகள் விற்பனை செய்ய உரிமம் பெற்றவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்!
சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் உள்கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற்றவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சிய லோகநாயகிதலைமையில் நடைபெற்றது. தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் அரசின் நிபந்தனைகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், அரசின் நிபந்தனைகளுக்குள்பட்டு உரிமம் பெற்றுள்ளவர்கள் எந்த இடத்தில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ள இடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். மேலும் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் விதிமுறைகளுக்கு மீறி அனுமதி அளிக்க வேண்டுமென கோரி யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றார். சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா பேசியது:- சங்ககிரி, எடப்பாடி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பித்துள்ளவர்கள் அவசியம் அரசின் விதிமுறைகளை பின்பற்றவேண்டும். வேறு இடத்தில் பட்டாசுகளை இருப்பு வைக்க கூடாது. விண்ணப்பித்துள்ள இடத்தில் மட்டுமே பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றார். மேலும் அவர் கடைகளில் வண்ணமின்விளக்குகள், மேளம் இசைத்து விற்பனை செய்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவதோடு தற்காலிக உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், வட்டாட்சியர்கள் வாசுகி (சங்ககிரி), கே.வைத்தியலிங்கம் (எடப்பாடி), எடப்பாடி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எஸ்.சிவராஜ், சங்ககிரி தீயணைப்பு நிலை அலுவலர் கே.ரமேஷ்குமார், மின்வாரிய உதவி பொறியாளர்கள் ரமேஷ்பாபு, சகுந்தலா, சங்ககிரி சங்ககிரி, எடப்பாடியில் தற்காலிக பட்டாசுகள் விற்பதற்கு உரிமம் பெற்ற 91 பேர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story