டி.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை
Bhavanisagar King 24x7 |11 Oct 2024 4:27 AM GMT
டி.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை
டி.என்.பாளையம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் கபாலசாமி. இவருடைய மகள் ஈஸ்வரி வயது 27). இவருக்கும், ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை தூர்வரப்பள்ளம் நடுவீதியை சேர்ந்த எல்லப்பன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனால் ஈஸ்வரி பெருமுகைபுதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜெகதீஷ் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கபாலசாமி கடந்த 25 நாட்களுக்கு முன்புஇறந்து விட்டார். இதனால் ஈஸ்வரி மனமுடைந்து வீட்டின் மேற் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story