தாளவாடி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
Bhavanisagar King 24x7 |11 Oct 2024 4:57 AM GMT
தாளவாடி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
தாளவாடி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது தாளவாடியில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூர் ஊராட்சி ஒசட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் ஆனந்த். இவர் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக, ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ர செல்வத்தை அணுகிய போது, அவர் ரூ.45 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் சிவராஜ் ஆனந்த்புகார்அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.45 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை ருத்ரசெல்வத்திடம் சிவராஜ் ஆனந்த் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ருத்ரசெல்வத்தை செய்தனர். கைது
Next Story