அமராவதி ஆற்றுப்பகுதியில் தொடர் மழை. தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
Karur King 24x7 |11 Oct 2024 7:40 AM GMT
அமராவதி ஆற்றுப்பகுதியில் தொடர் மழை. தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
அமராவதி ஆற்றுப்பகுதியில் தொடர் மழை. தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. அமராவதி ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரூர் அருகே பெரியஆண்டாங் கோயில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 863 கனஅடியாக உள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது நீர் இருப்பு 78.28 அடியாக உள்ளது. இதனால், அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 300 கன அடி நீரும், பாசன வாய்க்காலில் 100 கனடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் அமராவதி ஆற்று நீர் பிடிப்பு பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால், அணையில் இருந்து விடுவிக்கப்பட்ட தண்ணீர் குறைவாக இருந்தாலும், மழை நீருடன் சேர்ந்து தற்போது பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமராவதி ஆற்றை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அமராவதி ஆற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story