கரூரில் ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை நடத்திய ஆட்டோ உரிமையாளர்கள்.

கரூரில் ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை நடத்திய ஆட்டோ உரிமையாளர்கள்.
கரூரில் ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை நடத்திய ஆட்டோ உரிமையாளர்கள். கரூரில், பேருந்து நிலையம் அருகாமையில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை விழா சங்கத்தின் தலைவர் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு முழுவதும் வருமானத்தை ஈட்டி வாழ்வளிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தை தூய்மைப்படுத்தி இன்று அதற்கு பொட்டிட்டு, அலங்காரம் செய்து, மலர் மாலை அணிவித்து, ஆயுத பூஜையில் ஈடுபட்டனர். பேருந்து நிலைய வளாகப் பகுதியில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆயுத பூஜையில் பயன்படுத்தும் பொறி கடலை சுண்டல் தேங்காய் வாழைப்பழம் மாவிலை தோரணங்கள் அனைத்தும் வைத்து சிவாச்சாரியார் பூஜை செய்து மகா தீபாதாரணையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்டோவை அலங்கரித்து பூஜையில் ஈடுபட்டதால் திருஷ்டி கழிப்பதற்காக வெள்ளை பூசணியில் ஆரத்தி எடுத்து சாலையில் உடைத்து திருஷ்டி கழித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் பொரிகடலை, தேங்காய், வாழைப்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story