கடம்பன்குறிச்சி ஆற்றில் தவித்த மாட்டை மீட்க சென்றவர் மாடுடன் நீரில் மூழ்கி பலியானவரை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.

கடம்பன்குறிச்சி ஆற்றில் தவித்த மாட்டை மீட்க சென்றவர் மாடுடன் நீரில் மூழ்கி பலியானவரை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.
கடம்பன்குறிச்சி ஆற்றில் தவித்த மாட்டை மீட்க சென்றவர் மாடுடன் நீரில் மூழ்கி பலியானவரை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள். கரூர் அருகே ஆயுதபூஜைக்காக காவிரி ஆற்றில் மாட்டு வண்டியை கழுவ இறங்கிய போது மாடு தண்ணீரில் மூழ்கி பலி - அதனை மீட்க சென்றவரும் தண்ணீரில் மூழ்கி பலியான சோகம். கரூர் மாவட்டம், மண்மங்களம் தாலுக்கா, கடம்பன்குறிச்சியை சேர்ந்தவர் தர்மலிங்கம். தன்னிடம் இருக்கும் இரட்டை மாட்டு வண்டியினை ஆயுதபூஜைக்காக கழுவுவதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றிற்கு மாட்டு வண்டியை நேற்று அக்டோபர் 11ம் தேதி மதியம் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள பழைய மணல் குவாரி செயல்பட்ட இடத்திற்கு சென்று காவிரி ஆற்றில் மாட்டு வண்டியை இறக்கிய போது ஒரு மாடு தண்ணீரில் மூழ்கியது. இதனை அருகில் குளித்துக் கொண்டிருந்த மண்மங்களம் மேதி நகரை சார்ந்த சேட்டு என்கின்ற பழனியப்பன் (வயது 65) மாடுகளை காப்பாற்ற தண்ணீரில் இறங்கி முயன்றுள்ளார். அப்போது, தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் தேடி பழனியப்பனின் உடலை தீயணைப்பு துறையினர்மீட்டனர். இதனிடையே மாடும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல் நிலைய காவல்துறையினர் பழனியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாட்டை காப்பாற்ற முயன்ற பழனியப்பன் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story