ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியின் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம்.
Andippatti King 24x7 |12 Oct 2024 12:20 PM GMT
பள்ளியின் தாளாளர் பாண்டி செல்வம் ,இயக்குனர்கள் கபில் மற்றும் டாக்டர் ஸ்ரீ வாகினி, முதல்வர் வீரலட்சுமி மற்றும் ஆசிரியைகள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர்.
ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியின் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்த கோவில் சாலையில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவராத்திரியை முன்னிட்டு கடந்த 10 தினங்களாக நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, தினந்தோறும் வழிபாடு நடத்தப்பட்டது. வித்யாரம்பத்தின் தொடர்ச்சியாக பள்ளிக்கு ஏராளமான குழந்தைகள் வருகை தந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது .அப்போது வந்த பெற்றோர் மற்றும் மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாண்டி செல்வம் ,இயக்குனர்கள் கபில் மற்றும் டாக்டர் ஸ்ரீ வாகினி, முதல்வர் வீரலட்சுமி மற்றும் ஆசிரியைகள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மழலையர்களை நெல் மற்றும் பச்சரிசியில் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை தங்கள் பிஞ்சு கரங்களால் எழுத வைத்து, அவர்களுடைய கல்வியை வளர வாழ்த்து தெரிவித்தனர். பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.
Next Story