விஜயதசமியையொட்டி ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் கல்வி கடவுள் ஆன சரஸ்வதி தேவியை வணங்குவது வழக்கம் .இந்த நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது சிறப்பாகும். அதன்படி விஜயதசமியில் கல்வி,கலைகள்,தொழில் என பல்வேறு நற்செயல்கள் தொடங்குதல்,மழலை குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்த்தல் பாட்டு,இசைக்கருவி, நடனம், புதிதாக தொழில் கற்றுக் கொள்வது ஆகியவற்ற இந்த நாளில் தொடங்குவது வழக்கமாக உள்ளது . மங்களகரமான விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யபடுகிறது, இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள தனியார்(ராசி பள்ளியில் RASI INTERNATIONAL) பள்ளியில் வித்யா ரம்பம் நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சாந்தா , பள்ளி தாளாளர் சத்தியமூர்த்தி, தனியார் பள்ளி கல்வி அலுவலர் ஜோதி, மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகளின் சுண்டு விரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய்மொழியான அ, ஆ என்ற எழுத்தையும், ஓம் என்ற எழுத்தை எழுத வைத்தார்கள். முன்னதாக வேதாச்சாரியார்கள் யாகம் வளர்த்து, வேத மந்திரங்கள் முழக பூஜைகள் செய்தனர். சரஸ்வதி தேவியின் அருள் பூரணமாக கிடைக்க எதற்காக மழலையர் வகுப்பில் சேர்க்க விஜயதசமி சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து வந்திருந்தனர். கல்வி, செல்வம், வீரத்தை எடுத்துரைக்கும் வகையில் கொலுவைத்து நவராத்திரி விழா பள்ளியில் சிறப்பாக கொண்டாடிய மகிழ்ந்தனர்.
Next Story