துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியை அமைச்சர் துவக்கி வைப்பு
Dharapuram King 24x7 |12 Oct 2024 2:04 PM GMT
துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியை அமைச்சர் துவக்கி வைப்பு
துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியை அமைச்சர் துவக்கி வைப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் பழமை வாய்ந்த அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த துர்க்கை அம்மன் கோவிலில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சிக்கு தாராபுரம் திமுக மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சசிகலா தில்லை முத்து தலைமையிலும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை தரிசனம் செய்துவிட்டு அங்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரிசியில் அ முதல் அக்கு வரை எழுதி தங்களது முதல் படிப்பதற்கு தொடங்கினர். இதில் கலந்துகொண்ட 40 குழந்தைகளுக்கும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குழந்தைகளுக்கு நோட்டு மற்றும் பேனா ஆகியவற்றை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி பெரியசாமி, சரஸ்வதி ராஜேந்திரன் மற்றும் சிவசங்கர், அருக்காணி, கோவில் குருக்கள் கணேஷ் ஐயர், செயல் அலுவலர் சுந்தரவடிவேல், தர்கர் பவானி, சக்திவேல், சரவணன், பிரண்ட்ஸ் ஆர்ச் தம்பி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
Next Story