ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நவராத்திரி கொலு மற்றும் விஜயதசமி விழா

ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  நவராத்திரி கொலு மற்றும் விஜயதசமி விழா
ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நவராத்திரி கொலு மற்றும் விஜயதசமி விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 02.10.24 (புதன்கிழமை) முதல் 11.10.24 (வெள்ளிக்கிழமை) வரை நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொலுவில் பொம்மைகள் 9 படிகளாக வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. தினசரி காலை 10.00 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் பூஜையும் நவராத்திரி வழிபாடும் நடத்தப்பட்டது. அலைமகள்மலைமகள் கலைமகள் ஆகியோர் திருவருளைப் பெற்று உலக அமைதி, மழை மற்றும் செழிப்பிற்கான வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12.10.24 (சனிக்கிழமை) விஜயதசமி அன்று பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான சேர்க்கை மிக சிறப்பாக நடைபெற்றது. வித்யா நிகேதன் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 'வித்யாரம்பம்' செய்வித்து அந்தணர் வேதம் முழங்க பெற்றோர்கள் தங்கள் மழலைகளின் கைகளில் மஞ்சளைப் பிடித்து நெல்லில் 'ஹரி ஓம்', 'அ' என்று எழுதி தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறக்க கலைமகளை வழிபட்டனர். மேலும் மஞ்சள் கலவையில் மழலையர்களின் கைப்பதிவுகளை வரைபடத்தாளில் பதிய வைத்து அந்தத் தாள் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. பெற்றோர்கள் மழலையர் வகுப்பில் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறைகளையும், செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மழலை வகுப்புகளின் நேர்த்தியான அலங்கரிப்பு மற்றும் விளையாட்டு உபகரணங்களின் மூலம் மழலைகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஈடுபாட்டுடன் விளையாடினர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் இயக்குநர்கள், பள்ளி முதல்வர், ஆசிரிய ஆசிரியைகள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story