திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை, காதலன் கழுத்தை அறுத்துக் கொண்டு சிகிச்சை

குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புக்குழி கிராமத்தை சேர்ந்தவர் மரம் வெட்டும் தொழிலாளி ரெங்கன் - ராஜலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு மகன் கோபால், மகள் பிரியா உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பிரியாவை இரும்பூதிபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கடந்த 08.09. 2019 ஆம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். 4 வயதில் கோவர்த்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்னரை ஆண்டுகளாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது தந்தை வீட்டில் வசித்து வருகின்றார். இவருக்கும் உப்பாறு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரியா காணவில்லை அதே போல் சந்தோஷ் காணவில்லை என அவரின் தந்தை குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒந்தாம்பட்டியில் ராஜா என்பவரின் வயல்வெளியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அதன் பிறகு இன்று அதிகாலை வீட்டிலிருந்த ராஜா வெளியே வந்து பார்த்தபோது ராஜாவின் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சேலையில் தூக்கில் தொங்கியவாறு பிரியா இருந்துள்ளார். அருகில் கழுத்தில் கீறிய நிலையில் சந்தோஷ் இருந்துள்ளார் அதனை எடுத்து போலீசாருக்கு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து இங்கு வந்த உறவினர்கள் சந்தோஷை கார் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் பிரியா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரியாவின் தந்தை ரெங்கன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story