சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவனுக்கு போக்சோ
Nagercoil King 24x7 |13 Oct 2024 5:41 AM GMT
குளச்சல் அருகே
குமரி மாவட்டம் குளச்சல் பகுதி சேர்ந்த 17 வயது சிறுமியின் பெற்றோர் தற்போது மனவளக்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். சிறுமி சென்னையில் பிரபலமான ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் கல்லூரியில் லீவு போட்டு ஊரில் சிகிச்சைக்காக பெற்றோர் தக்கலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் சிறுமி குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 11- ம் வகுப்பு படிக்கும் போது உடன்படித்த மாணவனை காதலித்ததாகவும், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சிறுமியை அந்த மாணவன் அழைத்துக்கொண்டு நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அங்கு மொட்டை மாடியில் வைத்து உல்லாசமாக இருந்ததாகவும், பின்னர் மே 18ஆம் தேதி சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று மீண்டும் உல்லாசமாக இருந்தாகவும் தெரியவந்தது. தற்போது சிறுமி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
Next Story