மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிலாளி பலி

மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிலாளி பலி
வெள்ளகோவில் அருகே தனியார் நூல் மில்லில் வேலை செய்த வடமாநில தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி பிங்கி குமாரி என்ற மனைவி பீகாரில் உள்ளார். அவர் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.தீபக்குமார் வெள்ளகோவில் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வந்தார். தோல் நோய் ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில மாதங்களாக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மூச்சு விட முடியாமல் சத்தம் போட்டு உள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீபக் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வெள்ளகோவில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story