மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட எம்எல்ஏ
Tiruchengode King 24x7 |13 Oct 2024 8:34 AM GMT
மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட எம்எல்ஏ
திருச்செங்கோட்டில் நேற்று இரவு கனமழை பெய்தது 78 மில்லி மீட்டராக பதிவான இந்த மழையினால், நகரின் தாழ்வான பகுதிகளான சக்திவேல் நகர் , சாணார்பாளையம், சட்டையம் புதூர், சூரியம்பாளையம் , உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் ஆறு போல் ஓடியது. கால்வாய்கள் நிரம்பி தாழ்வான வீடு பகுதி களுக்குள் தண்ணீர் புகுந்தது . மழை குறைந்ததும் தண்ணீர் வடிய தொடங்கினாலும், வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் வெளியேறாமல் தேங்கி நின்றது. பல கழிவு நீர் கால்வாய்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அந்தப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், நகர செயலாளர் குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்து மழை நீரை அகற்றிய நிலையில் தண்ணீர் தேங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து நிரந்தர தீர்வு காணவும் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்
Next Story