பள்ளிபாளையம் ஜவுளிக்கடைகளில் அலைமோது மக்கள் கூட்டம்
Komarapalayam (Pallipalayam) King 24x7 |13 Oct 2024 10:42 AM GMT
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பள்ளிபாளையம் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கான விற்பனையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனை ஒட்டி பள்ளிபாளையத்தில் செயல்படும் ஜவுளி கடைகள் பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிகம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிகளவு பொருட்களை இருப்பு வைத்துள்ளனர் . நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள், அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு தீபாவளிக்கு முந்தைய தினம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு, தீபாவளி போனஸ் விசைத்தறி தொழிலாளர்களுக்கு விசைத்தறி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பள்ளி பாளையத்தில் செயல்படும் ஜவுளிக்கடைகளில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் தற்போது அலைமோத தொடங்கியுள்ளது. இது குறித்து ஆவரங்காடு பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சண்முகம் கூறும் பொழுது பள்ளிபாளையத்தை பொறுத்தவரை தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் தான் போனஸ் தொகை தருவார்கள். அதுவும் மதியம் அல்லது மாலை நேரத்தில் வழங்குவதால், ஜவுளிகளை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் விடிந்தால் தீபாவளி என்ற நிலை இருப்பதால் என்ன பொருட்களை வாங்குவது!? என்ன திட்டமிடுவது!? எங்கு செல்வது என்று எதுவுமே முடிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தீபாவளிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தற்போது ஆயுத பூஜை ,விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை தினம் ஆகியவை ஒன்றாக வந்துள்ளதால் முன்கூட்டியே குடும்பத்தினருக்கு ஜவுளிகளை எடுப்பதற்காக பள்ளிபாளையத்தில் செயல்படும் ஜவுளி கடைக்கு வருகை தந்துள்ளேன். இதற்கான பணத்தேவைக்காக வெளியிடங்களில் கடன் பெற்று தான் இந்த ஜவுளிகளை எடுக்கிறேன். என்றாலும் தீபாவளி தினத்திற்கு முந்தைய நாள் கடைசி நேர அவசர நிலையில் ஜவுளி எடுப்பதை தவிர்க்கும் போட்டு இத்தகைய முடிவை எடுத்து அதன்படி குடும்பத்தாருக்கு ஜவுளிகள் எடுக்க வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.. இதேபோல பட்டாசு வாங்க விரும்பும் பொது மக்களும் தீபாவளி சமயத்தில் ஏற்றப்படும் விலை உயர்வை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே பட்டாசுகளை ஆன்லைன் மூலமாக நேரடியாக சிவகாசிக்கு ஆர்டர் செய்து, பெறுவது உள்ளூரில் உள்ள நண்பர்களை கொண்டு ஆன்லைனில் பட்டாசுகளை பெறுவது போன்றவற்றை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது....
Next Story