சத்தி தனியார் ஆஸ்பத்திரியில் நின்ற வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Bhavanisagar King 24x7 |14 Oct 2024 5:26 AM GMT
சத்தி தனியார் ஆஸ்பத்திரியில் நின்ற வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சத்தி தனியார் ஆஸ்பத்திரியில் நின்ற வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு சத்தி - கோபி ரோடு, மீன்கடை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்னி வேனில் வந்துள்ளனர். வேனை கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி ஒட்டி வந்துள்ளார். வேனை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி விட்டு டாக்டரை பார்க்க உள்ளே சென்று விட்டனர். டிரைவர் வேன் அருகே போன் பேசிக் கொண்டிருந்தபோது. திடீரென வேனில் இருந்து புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக் கண்ட டிரைவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரி ஊழியர் அங்கிருந்த தீ தடுப்பு கருவி கொண்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு தீ பரவாமல் அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்தி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் வேன் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story