தெருவில் நடந்து சென்ற பெண்ணை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற நாயின் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிசிடிவி
தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலை ஓரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றி வருகின்றது இந்நிலையில் தேனி பழைய டிவிஎஸ் ரோடு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கின்ற தெருக்களில் பகல் நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களையும் நடந்து செல்பவர்களையும் நாய்கள் துரத்தி துரத்தி அச்சுறுத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் அந்தத் தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை இரண்டு நாய்கள் துரத்திக் கொண்டு கடிக்க முயற்சி செய்து அந்தப் பெண் நாயை துரத்தி விட்டு கீழே விழுந்து சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதுபோன்று பலமுறை இந்த தெருக்களில் நாய்கள் பொதுமக்களை கடிக்க முயற்சி செய்யும் சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பகுதி மக்கள் கூறுகின்றன சிறு குழந்தைகள் வயதானவர்கள் என அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் நாய்களினால் ஏதும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக நாய்களை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
Next Story