தேனியில் இளைஞர் அணி சார்பில் வெற்றிலை பாக்குடன் வீதி வீதியாக சென்று பொதுமக்களை அழைத்த தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர்

தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது இந்நிலையில் மாநாடு நடைபெறுவதை பொதுமக்களிடம் தெரியப்படுத்தும் வகையில் தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாநாடுக்கு வருகை தர பொதுமக்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மேளதாளங்களுடன் தேனி அல்லிநகரம் பகுதியில் வீதி வீதியாக ஒவ்வொரு வீடுகளுக்கும், கடைகளுக்கும் சென்று பொது மக்களிடம் மாநாடுக்கு வரவேற்கும் விதமாக சிறிய தட்டுடன், வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்கள் அனைவரும் மாநாடுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து அழைப்பு விடுத்தனர் தமிழர் பாரம்பரியபடி வெற்றிலை பாக்கு வைத்து மாநாடுக்கு பொதுமக்களை அழைத்த விதம் கவனம் பெற்றது
Next Story