திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் கிணற்றில் இறங்கி போராட்டம்
Tirupathur King 24x7 |14 Oct 2024 11:47 AM GMT
திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் கிணற்றில் இறங்கி போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மலக்கழிவுகள் கலந்துள்ள குடிநீரை கிணற்று பள்ளி குழந்தைகளுக்கும் விநியோகிக்கப்படும் அவலம். கிணற்றில் இறங்கி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சி ஜோன்றம்பள்ளி பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிணறு திறந்தவெளி கிணறாக இருப்பதால் மழைக்காலங்களில் அந்த கிணற்றின் அருகாமையில் இருக்கும் கால்நடைகளின் கழிவுகளும் மனிதர்களின் மலக்கழிவுகளும் கலந்து சென்று கிணற்றில் கலந்து விடுகிறது அதே தண்ணீரைதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் இதனால் துர்நாற்றம் வீசி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. அதே பகுதியில் இயங்கும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கூட குடிநீரை தான் குடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதன் காரணமாக எங்கள் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு போன்ற காய்ச்சல் உபாதைகளும் ஏற்பட்டுள்ளன கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்தும் விட்டது இவ்வளவு சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் திறந்த வெளி கிணற்றை தூய்மைப்படுத்தி சுற்றுச்சுவர் எழுப்பி மூடி போட்டு குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காததால் சுமார் 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் கிணற்றில் இறங்கி கோஷங்கள் எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கிணறு சுற்றுப்பகுதியில் நிலசரிவு ஏற்பட்டுள்ளது எனவே இந்த கிணற்றை சரி செய்ய வாய்ப்பு இல்லை ஆகையால் இன்னும் பத்து தினத்திற்குள் பொது நிதியிலிருந்து புதியதாக கிணறு வெட்ட நிதி ஒதுக்கி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறோம் என்று கூறி உத்திரவாதம் அளித்து முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் ஒதுக்குவதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் மூன்று மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story