காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
Kangeyam King 24x7 |14 Oct 2024 12:24 PM GMT
காங்கேயம் கீரனூர் அருகே துளிகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குலம் குட்டைகளை தூர் வார்வது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 27 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று 145 ஆவது கட்டமாக கீரனூர் ஊராட்சி ரங்கையன்வலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த விழாவில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார், கீரனூர் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு தலைவர் சிவராம் மற்றும் அமைப்பு தன்னார்வலர்கள், வெள்ளகோவில் நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், ஈரோடு சிறகுகள் அமைப்பு நிர்வாகிகள், அருள் நர்சரி உரிமையாளர் அருள் சுரேஷ், நால்ரோடு தனியார் பள்ளி உரிமையாளர் சேகர், பி.கே.பி. நிறுவன உரிமையாளர் சண்முகம், செல்வநாயகி பயர் வூட்ஸ் உரிமையாளர் கருப்புசாமி மற்றும் துளிகள் அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
Next Story