பரமத்தி வேலூர் தினசரி பூக்கள் விலை சரிவு.

Paramathi Velur King 24x7 |14 Oct 2024 8:26 PM ISTபரமத்தி வேலூர் தினசரி பூ ஏல மார்கெட்டில் பூக்களின் விலை சரிவடைந்துள்ளது.
பரமத்தி வேலூர், அக். 14: பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பட்டி,குப்புச்சிபாளையம்,அண்ணாநகர்,குஞ்சாம்பாளையம்,ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயில் பயிர் செய்துள்ளர். அங்கு விளையும் பூக்களை பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். கொண்டுவந்த பூக்களை பரமத்தி வேலூல் பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் வந்து ஏலம் கூரி வாங்கி செல்வது வலக்கம். இன்று நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் கிலோ ஒன்று குண்டு மல்லிகை பூ 400-க்கும்,சம்பங்கி பூ-60-க்கும்,அரளி பூ- 70-க்கும்,ரோஸ் பூ-220-க்கும்,பன்னீர் ரோஸ் 220-க்கும் செவ்வந்தி பூ-300-க்கும்,முல்லை பூ 500-க்கும்,கனகாம்பரம் 400-க்கும் ஏலம் போனது. ஆயுதபூஜை விழா நிறைவடைந்த நிலையில் பூக்கள் விலை சரிவடைத்துள்ளது.
Next Story
