திருப்பத்தூர் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆட்சியர் அறிவிப்பு!
Tirupathur King 24x7 |15 Oct 2024 2:03 AM GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் எதிர்வருகின்ற வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆட்சியர் அறிவிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் எதிர்வருகின்ற வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆட்சியர் அறிவிப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் எதிர்வருகின்ற வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசைகளிலும் வெள்ளம் வரக்கூடிய வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாரும் மிக கன மழை பொழியும் நேரங்களில் அருகில் உள்ள பள்ளிக் கட்டிடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் முதலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளது ஏரிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் சில இடங்கள் ஆழமானதாக உள்ளதால் அவ்விடங்களில் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மழை மற்றும் இடி மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியே வராமலும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24X7 அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி *எண் 1077" 04179 229008" மற்றும் 04179 222111" ஆகிய எண்களில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story