பெரம்பலூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

போலீசார் விசாரணை
பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் இரு + சக்கர வாகன விற்பனை நிலையம் எதிரே சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்றில் நேற்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மோட்டாருக்கு பயன்படுத்தும் ரப்பர் பெல் டால் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த வழியாகசென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந் தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இறந்தவர் குன்னம், தாலுகா, சித்தளியை சேர்ந்த தங்கப்பிள்ளையின் மகன் மணி கண்டன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story