திருமயத்தில் பலத்த மழை

வானிலை
திருமயம்: திருமயம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்க டலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருமயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கடை வீதி,பஸ் நிலையம்,கோட்டை பகுதிகளில் சாலைக ளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டை நுழைவு வாயிலில் உள்ள வாலிபால் மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் அரிமளம், கே.புதுப்பட்டி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக தாமரை, வேங்கை, கண்மாய்களில் 70 சதவீத அளவுக்கு தண் ணீர் நிரம்பியுள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள கருங் குளம் நிரம்பி உபரிநீர் தாமரை கண்மாய்க்கு சென்றது. கண் மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய் மற்றும் பாலத்தில் ஏற்பட்டிருந்த அடைப்பு மற்றும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.
Next Story