எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி பாதைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

Edappadi King 24x7 |15 Oct 2024 3:51 PM ISTஎடப்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வருவதால் பெரிய ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் கழுங்கு வழியாக வெளியேறி வருகிறது. பெரிய ஏரியால் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி பெறுகிறது. பெரிய ஏரி நிரம்பியதால் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளான வீரப்பம்பாளையம், எடப்பாடி, மலங்காடு, ஆலச்சம்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள கிண்ணத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எடப்பாடி பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் நீர் குள்ளம்பட்டி, செட்டியபட்டி, மயிலம்பட்டி, தேவூர் வழியாக சரபங்கா நதி வழியாக சென்று அண்ணமார் கோயில் அருகில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
Next Story
