ஆரணி. போளூர் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை.

ஆரணி. போளூர்  பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை.
ஆரணி, அக் 15 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள படவேடு செண்பகத்தோப்பு அணையில் நீர் நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் கமண்டல நாகநதி ஆற்றின் கரை ஓரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு போளூர் பொதுப்பணித்துறை அதிக
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள படவேடு செண்பகத்தோப்பு அணையில் நீர் நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் கமண்டல நாகநதி ஆற்றின் கரை ஓரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு போளூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். படவேடு அருகே செண்பகத்தோப்பு கிராமத்தில் உள்ள கமண்டலாற்றின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளின் வாயிலாக சுமார் 8350.40 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்கு பயன் பெறுகிறது. இந்த அணையின் நீர் மட்ட உயரம் 62 அடி ஆகும். இதன் முழு கொள்ளளவு 287.20 மி.க அடியாகும். அக்டோபர் 14 ல் இந்த அணையில் 55.37 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. தற்போது அதிகப்படியான மழை கணிக்கப்பட்டுள்ளதால் செண்பகத் தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரம் பட்சத்தில் நீர்வரத்துக்கேற்ற அணையிலிருந்து நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது. எனவே செண்பகத்தோப்பு அணையின் உபரி நீர் செல்லும் கமண்டல ஆற்றின் கரையோர கிராமங்களான படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், ராமநாதபுரம், ஆரணி பகுதி ஆற்றின் கரைப்பகுதிகளிலும் மற்றும் ஆரணி பகுதி ஆற்றின் இரு கரைகளின் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் போளூர் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
Next Story