ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆரணி கோட்டாட்சியரிடம் மனு.
Arani King 24x7 |15 Oct 2024 12:52 PM GMT
ஆரணி அக் 15. ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு திட்டம் நடைபெற்றதில் இராட்டிணமங்கலத்தில் ஏரிக்காால்வாயை அகற்றக்கோரி ஊராட்சித்தலைவர் எம்.செல்வம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு திட்டம் நடைபெற்றதில் இராட்டிணமங்கலத்தில் ஏரிக்காால்வாயை அகற்றக்கோரி ஊராட்சித்தலைவர் எம்.செல்வம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். . ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரணி வட்டம், இராட்டிணமங்கலம் கிரா‘மத்தில் உள்ள சர்வே எண் 147/5, 147/ 1C1A1A ஆகிய எண்களை கொண்ட நிலத்தின் மத்தியில் செல்லும் ஏரி நீர் வரத்து கால்வாய் மேற்கு பகுதியிலிருந்தும், தெற்கு பகுதியிலிருந்தும், வரும் மழை நீர் கிழக்கு பகுதியில் உள்ள இரும்பேடு ஏரிக்கு செல்லும் முக்கியமான கால்வாயை ஆக்கிரமித்து உள்ளனர். இனால் வருகின்ற வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும், ஆக்கிரமிப்பை அகற்றி தர ஆவணம் செய்யுமாறு கோட்டாட்சியரிடம் இராட்டிணமங்கலம் ஊராட்சித்தலைவர் செல்வம் என்பவர் மனு கொடுத்தார். மேலும் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசு சான்று, தடையின்மை சான்று, ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு.டி.ஆர் திருத்தம், அனாதீனம் தடை நீக்கம், மணல் எடுக்க ஆட்சேபனை, வரைபட திருத்தம், உட்பிரிவு பட்டா மாற்றம், மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமி்பபு அகற்ற கோரி, காலியாக உள்ள கிணற்றை மூடக்கோரி, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம் கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 61 மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்ட அலுவலர் உத்தரவிட்டார்.
Next Story