நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா!

மாவட்ட சுற்றுலா அலுவலர் அபாரஜிதன் வீசானம் சின்ன ஏரி குளத்துக்கரையில் மரக்கன்றுகள் நட்டுவைத்து விழாவை துவக்கி வைத்தார்.
நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை மற்றும் நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு வீசானம் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை தலைவர் டி. எம். மோகன் அனைவரையும் வரவேற்றார். வீசானம் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சிமுத்து தலைமை ஏற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் அபாரஜிதன் வீசானம் சின்ன ஏரி குளத்துக்கரையில் மரக்கன்றுகள் நட்டுவைத்து விழாவை துவக்கி வைத்தார். நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அட்மா குழு தலைவர் பழனிவேலு, பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார், மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமதாஸ்,பிரபாகரன், முருகன்,உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து 600 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலாளர் ராதா சாமி நன்றி கூறினார்.
Next Story