உவரி கடற்கரையில் ஒத்திகை பயிற்சி
Tirunelveli King 24x7 |16 Oct 2024 3:06 AM GMT
ஒத்திகை பயிற்சி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திசையன்விளையில் தீயணைப்பு படையினர் உவரி கடற்கரையில் நேற்று பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். அப்பொழுது மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
Next Story