வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

X
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மரம் வெட்டுவதை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது அக் 3 அன்று தாக்குதல் நடத்தினர். இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆரணி வட்டத்தலைவர் ஆர்.கோபால் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். துணைத்தலைவர் கே.சிவக்குமார், போராட்டக்குழுத்தலைவர் ஜி.விநாயகம், வட்ட இணைசெயலாளர் பி.ரமேஷ்குமார், துணைசெயலாளர் கே.புருஷோத்தமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் வட்ட பொருளாளர் எஸ்.இராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Next Story

