காங்கேயம் அருகே கோவில் நிலம் மற்றும் நீரோடை ஆக்கிரமிப்பு செய்ததாக வட்டாட்சியரிடம் புகார்

காங்கேயம் அருகே கோவில் நிலம் மற்றும் நீரோடை ஆக்கிரமிப்பு செய்ததாக வட்டாட்சியரிடம் புகார்
காடையூர் பசுவன்மூப்பன்வலசில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான குலதெய்வம் கோவிலை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழிபட இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் நீரோடை ஆக்கிரமிப்பு
காங்கேயம் அடுத்த காடையூர் அருகே உள்ள பசுவன்மூப்பன்வலசு பகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான குலதெய்வம் கோவிலை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழிபட இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். பசுவன்மூப்பன்வலசு பகுதியில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குட கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாளசுவாமி கோவில்கள் மாற்று  சமூகத்தின் தோட்டத்திற்கு உள்ளே உள்ளதாகவும் இதனால் ஒவ்வொரு முறையும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் சாவியை வாங்கி செல்ல வேண்டியுள்ளதாகவும், மேலும் இந்த கோவிலானது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது  என்றும் காலம் காலமாக எங்கள் முன்னோர்கள் இங்கு வழிபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். கோவில் இடத்தை மீட்டுத் தரவும் தாங்கள் வழிபாடு செய்ய வேண்டிய 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தாராபுரதில் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் (DRO) இரண்டு முறைக்கு மேல் மனுகொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.  கோவிலில் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு தெரிவிக்கின்றனர். அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கோவிலை வரைபடத்தில் இருந்து நீக்க பட்டுள்ளதாகவும் இதுகுறித்து கடந்த மாதம் முழுவதும் போராடி வருவதாகவும் அது குறித்து காங்கேயத்தில் புதிதாக வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள மோகனன் அவர்களிடம் தெரிவித்ததாக கூறினர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள நீரோடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்  என்கின்றனர். வரும் 22ம் தேதி இதுகுறித்து நிலங்களை ஆய்வு செய்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட போவதாக தெரிவித்ததாகவும் கூறுகின்றார். மேலும் 22ம் தேதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அதிகாரிகளின் தூண்டுதலின் நாளே பெரியளவிலான அறப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
Next Story