மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
Thoothukudi King 24x7 |17 Oct 2024 2:20 AM GMT
தூத்துக்குடியில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாமினை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன் வரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதற்கான அடையாள அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். மேலும் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் கூடுதலாக 18ம் தேதி வரை முகாம் நடத்தப்படும் என அமைச்சர் தகவல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கப்பட்டு வருகிறது மேலும் இந்த மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறாத மக்களுக்கும் அதை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்கான முகாம் நடத்த அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர் அதன்படி தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறாத மக்களுக்கான சிறப்பு முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தனர். இந்த சிறப்பு முகாம் இன்று துவங்கி மூன்று நாட்கள் அதாவது வரும் 18ம்தேதி வரை தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. என்றார். இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பதிவு செய்த பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி கல்வி குழு தலைவர் அதிர்ஷ்ட மணி ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி , மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், திமுக வட்டச் செயலாளர்கள் கதிரேசன் கங்கா ராஜேஷ், வழக்கறிஞர் சதீஷ்குமார், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story