பண்ணாரி மாரியம்மன் கோவில் சார்பில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை இன்று செலுத்தப்படுகிறது
Bhavanisagar King 24x7 |17 Oct 2024 6:12 AM GMT
பண்ணாரி மாரியம்மன் கோவில் சார்பில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை இன்று செலுத்தப்படுகிறது
பண்ணாரி மாரியம்மன் கோவில் சார்பில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை இன்று செலுத்தப்படுகிறது தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அ சட்டசபையில் மற்ற மாநிலத்தில் உள்ள கோவில்களுடன் நல்லிணக்க உறவு மேம்பட வஸ்திர மரியாதை செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 3-ம் ஆண்டாக வஸ்திர மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பட்டுச்சேலை, பூமாலைகள், மஞ்சள், குங்குமம். பழங்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றை பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து நேற்று இந்து அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, பண்ணாரி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மேனகா. கோவில் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், பூங்கொடி மற்றும் கோவில் கண்காணிப்பாளர் பாலசுந்தரி மற்றும் கோவில் பூசாரிகள், பணியாளர்கள் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். இந்த பொருட்கள் சாமுண்டீஸ்வரி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான ரேவதி நட்சத்திர தினமான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி பூஜையின் போது அம்மனுக்கு செலுத்தப்படும்.
Next Story