வெளிமாநில லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது

X
Komarapalayam King 24x7 |17 Oct 2024 6:19 PM ISTகுமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. பழனிசாமி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஆனங்கூர் சாலை, சூர்யா மில்க் கடை பகுதியில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த இளங்கோவன், 58, என்பவரை கைது செய்து, அவர்களிடமிருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
