கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை பகுதிகளில் கோட்ட பொறியாளர் ஆய்வு

மேட்டுமகாதானபுரம், பிச்சம்பட்டி கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தில் மண் அரிப்பை சரி செய்யும் பணி
கரூர் கோட்டம், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டம் மேட்டு மகாதானபுரம் - பஞ்சப்பட்டி சாலையின் குறுக்கே கட்டளை மேட்டு பாசன வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அணுகுசாலையின் இடது பக்கத்தில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை கிருஷ்ணராயபுரம் கோட்டப்பொறியாளர் ரவிக்குமார், உதவிக் கோட்டப்பொறியாளர் கர்ணன், உதவிப்பொறியாளர் அசாருதீன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதே போல் பிச்சம்பட்டி வழியாக செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தின் அருகிலும் மண் அரிப்பை ஆய்வு செய்தனர். பின்னர் கோட்டப்பொறியாளர் மண் அரிப்பை தடுக்க 2 இடங்களிலும் தாங்கு சுவர் அமைக்க உத்தரவு செய்தார். தற்போது கட்டளை மேட்டு பாசன வாய்காலில் தொடர்ந்து நீர் சென்று கொண்டுள்ளதால் தாங்கு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளவில்லை. மேலும் அதே இடத்தில் பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தற்காலிகமாக மண் நிரப்பப்பட்டு மண்அரிமாணம் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆய்வு பணியின் போது, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.
Next Story