பரமத்தி அங்காளம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை.
Paramathi Velur King 24x7 |17 Oct 2024 3:17 PM GMT
பரமத்தி அங்காளம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது.
பரமத்தி வேலூர். அக்.17: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி அங்காளம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. முன்னதாக அங்காளம்மனுக்கு பால்,பன்னீர்,பஞ்சாமிர்தம், மஞ்சள்,திருமஞ்சல்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் கோவில் குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story